கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்


கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்
x

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர்

கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்கும் பொருட்டு திங்கட்கிழமை தோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயரால் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது குறைகளை மனு மூலம் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.



Next Story