குடும்ப அட்டைதாரர்களிடம் குறைகேட்பு


குடும்ப அட்டைதாரர்களிடம் குறைகேட்பு
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் குடும்ப அட்டைதாரர்களிடம் குறைகேட்பு கூட்டம் நடந்தது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை சார்பில் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் மின்னணு குடும்ப அட்டை தொடர்பாக குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில்குமார் தலைமை தாங்கி, மின்னனு புதிய குடும்ப அட்டை வேண்டியவர்களிடம் மனுக்களை பெற்றார். மேலும் குடும்ப அட்டையில் உணவுபொருள் சேர்த்தல், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் குறித்தம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் வட்ட வழங்கல் அலுவலர் வேலு, மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர் தயாநிதி, இளநிலை உதவியாளர் பிரசாத், வட்ட பொறியாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களிடம் குறைகளை கேட்டனர்.


Next Story