திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்


திருத்துறைப்பூண்டியில்  புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்  இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
x

திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:-

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாடு நடந்தது. இதை கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். மாரிமுத்து எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் வையாபுரி, மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சங்கரராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் இருந்து நாகை சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி- அகஸ்தியன்பள்ளி இடையேயான அகல ரெயில் பாதை திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


Next Story