நீடாமங்கலத்தில் ஜமாபந்தி நிறைவு


நீடாமங்கலத்தில் ஜமாபந்தி நிறைவு
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் நடந்த  ஜமாபந்தி நிறைவு பெற்றது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வட்டத்தில் ஜமாபந்தி நடந்தது. இதில் நீடாமங்கலம், வடுவூர், கொரடாச்சேரி ஆகிய வருவாய் வட்டங்களைச் சேர்ந்த 51 வருவாய் கிராமங்களின் வருவாய் கணக்குகளை கடந்த 24,25,26 ஆகிய மூன்று நாட்களில் திருவாரூர் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா ஆய்வு செய்தார். அப்போது பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு மற்றும் பட்டா நகல் வழங்கிட கோருதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 233 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதில். 30 பேருக்கு வீட்டுமனை பட்டாவும், 5 பேருக்கு பட்டா மாற்றத்திற்காக ஆணையும், 2 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணை உள்பட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தாசில்தார் பரஞ்ஜோதி, தனி தாசில்தார் (சமூகபாதுகாப்புத்திட்டம்) ராஜகணேஷ், துணை தாசில்தார் இளங்கோவன், தேர்தல் துணை தாசில்தார் ஜெயபாஸ்கர், வட்ட வழங்கல் அலுவலர் மணிவண்ணன், வட்ட துணை ஆய்வாளர் சுதந்திரமணி மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராமநிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story