திருப்பாவை பாசுரங்கள் பயிற்சி நிறைவு


திருப்பாவை பாசுரங்கள் பயிற்சி நிறைவு
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் திருப்பாவை பாசுரங்கள் பயிற்சி நிறைவு விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி லட்சுமி மில் மேல காலனி சமுதாயக் கூடத்தில் ஒரு மாதமாக திருப்பாவை 30 பாசுரங்கள், சேவ காலம், பஜனை, கோலாட்டம் மாணவ- மாணவிகளுக்கு கற்றுத் தரப்பட்டது. ஆண்டாள் ரெங்கமன்னார் நர்த்தன பஜனை குழு தலைவர் சீனிவாச ராமானுஜ தாசன் மாணவ- மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்தார். இதன் நிறைவு நாள் விழா மற்றும் பயிற்சி முடித்த மாணவ-மாணவிகளுக்கு சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஆண்டாள் ரங்க மன்னார் நர்த்தன பஜனை குழு தலைவர் சீனிவாச ராமானுஜ தாசன் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியையொட்டி கோலாட்ட நிகழ்ச்சி, பஜனை மாணவர்களால் நடத்தப்பட்டது.


Next Story