காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பு
கூடலூர் நகராட்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேனி
தேனி மாவட்டத்தில் கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் தினமும் மக்கும், மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரித்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 2 டன் காய்கறி குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி நகராட்சி உரம் தயாரிக்கும் கூடத்தில் நடந்து வருகிறது. இந்த உரத்தை விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை அவர்கள் ஏலக்காய் தோட்டங்கள், விளைநிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story