கார் கவிழ்ந்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி
எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானார். படுகாயம் அடைந்த அவரது மனைவி, மகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானார். படுகாயம் அடைந்த அவரது மனைவி, மகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்
காரைக்குடி பாண்டியன் நகரைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் கார்த்திக் (வயது 35). இவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி இருந்து தனியார் கம்பெனியில் கம்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது மனைவி சுவாதி (32), மகன் சித்தார்த் (7) ஆகியோருடன் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் நேற்று மாலை கார்த்திக் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார். காரை கார்த்திக் ஓட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழஈரால் பகுதியில் வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கார்த்திக், சுவாதி, சித்தார்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பரிதாப சாவு
கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சுவாதி, சித்தார்த் ஆகியோருக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.