தனியார் பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு


தனியார் பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பின்புறம், ஆலயத்திற்கு சொந்தமான ஒரு நர்சரி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டதால் பூட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நிர்வாகிகள் பள்ளிக்கு வந்தனர். அப்போது, பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த கம்ப்யூட்டர் சி.பி.யூ. மற்றும் ஹோம் தியேட்டர் ஆகியவை மாயமாகி இருந்தது. நள்ளிரவில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஆலய செயலாளர் ஜெயக்குமார் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் விசாரணை நடத்தி மா்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.


Next Story