சங்கு குளி தொழிலாளி மூச்சுத்திணறி சாவு
தூத்துக்குடியில் சங்கு குளி தொழிலாளி மூச்சுத்திணறி இறந்து போனார்.
தூத்துக்குடி அருகே சங்குகுளி தொழிலாளி மூச்சுத்திணறி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சங்குகுளி தொழிலாளி
தூத்துக்குடி திரேஸ்புரம் சாமுவேல்புரத்தை சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மகன் ஜெயராஜ் (வயது 45). சங்குகுளி தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் சேர்ந்து சங்குகுளிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளார. இவர்கள் தூத்துக்குடியில் இருந்து சுமார் 25 கடல்மைல் தொலைவில் சங்குகுளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, சங்குகுளித்து கொண்டிருந்த ஜெயராஜூவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இதை அறிந்த சக மீனவர்கள் உடனடியாக அவரை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
சாவு
தொடர்ந்து ஜெயராஜை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.