தாசில்தார் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை
தாசில்தார் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
விருதுநகர்
காரியாபட்டி,
ஆவியூர் கிராமத்தில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களிடையே இணக்கமற்ற சூழ்நிலை நிலவி வருவதால் மக்களிடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில் காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கணேசன், விருதுநகர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கருன் காரட் உத்தராவ் ஆகியோரது தலைமையிலும், காரியாபட்டி தனிதாசில்தார் அய்யாக்குட்டி, துணை தாசில்தார் அழகுபிள்ளை, காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோரது முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடனும், நட்புணர்வுடனும், சமூகநல்லிணக்கத்துடனும் சேர்ந்து வாழ அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story