வந்தவாசியில் காங்கிரஸ் பாதயாத்திரை நிறைவு விழா


வந்தவாசியில் காங்கிரஸ் பாதயாத்திரை நிறைவு விழா
x

காங்கிரஸ் பாதயாத்திரை வந்தவாசியில் நிறைவு பெற்றது.

திருவண்ணாமலை

வந்தவாசி

காங்கிரஸ் பாதயாத்திரை வந்தவாசியில் நிறைவு பெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. வடக்கு மாவட்டம் சார்பில் கண்ணமங்கலத்தில் தொடங்கிய பாதயாத்திரை ஆரணி, சேத்துப்பட்டு வழியாகச் சென்று வந்தவாசியை அடைந்தது.

பாதயாத்திரை குழுவினரை வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் நகர காங்கிரசார் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பாத யாத்திரை தேரடி, பஜார் வீதி வழியாக பழைய பஸ் நிலையம் அருகில் சென்று நிறைவடைந்தது.

அப்போது காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பாதயாத்திரையின் போது மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் எம்.வசந்தராஜ், மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை ஆகியோர் நிறைவுரை ஆற்றினர். சி.பெருமாள், என்.ஜெகன்நாத், கண்ணன், உமாசங்கர் உள்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.


Next Story