கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்:258 பேர் கைது


கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்:258 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 258 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் மத்திய அரசை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சியினர் 258 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசை கண்டித்து...

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியால் விலைவாசி உயர்வு, , பெட்ரோல்- டீசல் விலையை உயர்வை கண்டித்தும், ரேஷன் கடைகளை மூடும் திட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிடக் கோரியும் நேற்று காலையில் கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்திற்காக பயணியர் விடுதி முன்பு திரண்டனர்.

அங்கிருந்து மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், தாலுகா செயலாளர்கள் சாலமன் ராஜ், கே. ஜோதி, எஸ். ஜீவராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, கிருஷ்ணவேணி, விஜய லட்சுமி, மணி மற்றும் நிர்வாகிகள் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலத்தை நகர செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

சாலைமறியல்

ஊர்வலம் மெயின் ரோடு வழியாக ரெயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஸ்டேட் வங்கி முன்பு வந்த ஊர்வலத்தை கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வனசுந்தர், பத்மாவதி, கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். ரெயில் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறித்து கலைந்து போகுமாறு அவர்களை அறிவுறுத்தினர். இதனை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மீண்டும் கலைந்து போகுமாறு போலீசார் எச்சரித்தனர்.

258 பேர் கைது

ஆனால் சாலைமறியலை தொடர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 152 பெண்கள் உட்பட 258 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story