மத்திய அரசை கண்டித்துஅகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கம்பத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மத்திய அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று கம்பம், கூடலூர், நகர, ஒன்றியம் சார்பில், கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மத்திய அரசை கண்டித்தும், கம்பம் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story