தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை கண்டித்து 7-ந் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்


தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை கண்டித்து 7-ந் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்
x

தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை கண்டித்துஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்7-ந் தேதி நடக்கிறது

ஈரோடு

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு ஒப்படைக்கக்கூடாது. ஒப்பந்தம் தொடர்பாக ஏலம் அறிவிக்கப்பட்டதை திரும்ப பெற வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மாதந்தோறும் 1-ந் தேதி ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை திரும்ப பெறவில்லை என்றால் வருகிற 7-ந் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். மேலும், வருகிற 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


Next Story