சட்டசபையில் கவர்னர் பேசிய உரையை கண்டித்துதெற்கு தொகுதியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


சட்டசபையில் கவர்னர் பேசிய உரையை கண்டித்துதெற்கு தொகுதியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

சட்டசபையில் கவர்னர் பேசிய உரையை கண்டித்து தெற்கு தொகுதியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம்,

தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசிய உரையை கண்டித்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாதகாப்பட்டி காளியம்மன் கோவில் அருகே நேற்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.டி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரகுராஜ், மெடிக்கல் பிரபு, பச்சப்பட்டி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர், சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசிய உரையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாநகர பொதுச்செயலாளர் வக்கீல் கார்த்திக், சேவாதள நிர்வாகி வெங்கட்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் சஞ்சய் காந்தி, நாகராஜ், மோகன், திருஞானம், கலைப்பிரிவு யுவராஜ், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story