தூத்துக்குடியில்இந்தி திணிப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் பேரணி


தூத்துக்குடியில்இந்தி திணிப்பை கண்டித்து  நாம் தமிழர் கட்சியினர் பேரணி
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்இந்தி திணிப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் பேரணி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இந்தி திணிப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நேற்று பேரணி நடத்தினர்.

இந்திதிணிப்பு எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரின் குடியேற்றத்தை எதிர்த்தும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தூத்துக்குடியில் நேற்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. தூத்துக்குடி பீச் ரோட்டில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் சென்றவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி சென்றனர். பேரணி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே முடிவடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

பேரணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ச.சிவக்குமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நாடாளுமன்ற பொறுப்பாளர் சா.கி.ராஜசேகர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹூமாயூன் கபீர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story