கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் இருந்த கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு முறைகேடாக மணல் ஜல்லி, எம்.சாண்ட் ஆகிய கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்டித்தும், கனிம வளங்களை கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. பின்னர் அவர்கள் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் முரளிதரனை சந்தித்து மனு கொடுத்து விட்டு சென்றனர்.
Related Tags :
Next Story