விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஏழு பேருக்கு நிபந்தனை ஜாமீன்


விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஏழு பேருக்கு நிபந்தனை ஜாமீன்
x

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் 7 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஏழு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளானது தொடர்பாகவும் சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கில் ஜாமின் கோரி ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி , அவரது மனைவி மரியா உள்பட ஏழு பேர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வரும் ஆசிரம நிர்வாகிகள் மீதான வழக்கில் இரண்டு மாதங்களாகியும் புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நீதிமன்றம் யூகங்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும் தனிநபர் சுதந்திரத்தை பறிக்க முடியாது என்றும், சென்னையில் தங்கி சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட உத்தரவிட்டுள்ளார்.


Next Story