தர்மபுரி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட கண்டக்டர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


தர்மபுரி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட கண்டக்டர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக நகர கிளையில் டவுன் பஸ்ஸில் கண்டக்டராக சண்முகம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தர்மபுரி மண்டல அலுவலகத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர், பணி வழங்காமலும், விடுமுறை அளிக்காமலும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கண்டக்டர் சண்முகம் நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றார். அவருக்கு வழக்கமான பஸ்ஸில் செல்வதற்கு பதிலாக வேறு பஸ்ஸில் செல்வதற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த கண்டக்டர் சண்முகம் தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த தொழிலாளர்கள் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story