கண்டக்டர் குடும்பத்தினரை தாக்கி 50 பவுன் நகை கொள்ளை


கண்டக்டர் குடும்பத்தினரை தாக்கி 50 பவுன் நகை கொள்ளை
x

பாளையங்கோட்டையில் அரசு பஸ் கண்டக்டரின் வீடு புகுந்து அவரது குடும்பத்தினரை கட்டிப்போட்டு 50 பவுன் நகைகளை மர்மகும்பல் திருடி சென்று விட்டது. அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் அருகே உள்ள ஜான்சிராணிநகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவர் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் இவரது வீட்டுக்குள் புகுந்தது.

பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி 50 பவுன் நகை, செல்போன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தனர். அதன்பிறகு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ெபருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story