வேலைவாய்ப்பு கருத்தரங்கம்
வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடந்தது.
சிவகங்கை
இளையான்குடி,
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறை சார்பாக தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். சுயநிதி பாட பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் வாழ்த்துரை வழங்கினார். அமெரிக்கா எம்டெக்ஸ் என்டர்பிரைஸ் நிறுவன துணைத்தலைவர் முகமது சகாபுதீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தகவல் தொழில் நுட்ப துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். இதில் துறைசார் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்குபெற்றனர். உதவி பேராசிரியர் அருள் சேவியர் விக்டர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story