அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு
தேன்கனிக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு நடந்தது.
தேன்கனிக்கோட்டை, ஆக.11-
தேன்கனிக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. முன்னதாக மாவட்ட குழு உறுப்பினர் புஷ்பா கொடியேற்றி வைத்தார். மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் தாமரைச்செல்வி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவி சாவித்திரி, செயலாளர் சங்கரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி வேலை அறிக்கையை வாசித்தார். மாநகர செயலாளர் ரேகா வரவு, செலவு திட்ட அறிக்கையை சமர்பித்தார்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி 600 ரூபாயாக கூலி வழங்க வேண்டும். பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து மாவட்ட தலைவராக லலிதா, செயலாளராக ரேகா, பொருளாளராக சரஸ்வதி, துணை செயலாளராக வெண்ணிலா உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சூளகிரி வட்ட செயலாளர் சரஸ்வதி நன்றி கூறினார்.