அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் சங்க மாநாடு
தர்மபுரியில் அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் சங்க மாநாடு நடந்தது.
தர்மபுரி
தர்மபுரியில் அகில இந்திய அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சங்க நிர்வாகி குருராவ் தலைமை தாங்கினார். மாநாட்டை ரத்தினம் கொடியேற்றி தொடங்கி வைத்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் ராகவேந்திரன், மாநில செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர். ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் நடராஜன், கண்ணன், சுப்பிரமணியம், நேதாஜி, சுபாஷ், விஜயராஜன், முருகேசன், சிவக்குமார், தென்னரசு உள்பட பலம் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story