ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ பணியாளர் சங்க மாநாடு


ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ பணியாளர் சங்க மாநாடு
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ பணியாளர் சங்க மாநாடு நடந்தது.

தர்மபுரி

தர்மபுரியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ பணியாளர் நலச்சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் வரவேற்றார். நிர்வாகிகள் செலக்காரன், செல்வம், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட பொருளாளர் சக்திவேல் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில செயலாளர் மாரியப்பன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்க்குமரன் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து பேசினர். சாலை போக்குவரத்து மசோதாவை ரத்து செய்ய வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தால் உயர்த்தப்பட்ட அபராத தொகைகளை குறைக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6,000 பென்சன் வழங்க வேண்டும். தமிழக அரசு ஆட்டோ ஆப் செயலியை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மாதேஸ்வரன், மணி, சுதர்சனம், நடராஜன், முருகன், சாமிநாதன், கொழந்தைவேலு, மனோகரன், முனுசாமி, மாநில செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி ஜீவா என்று கூறினார். முன்னதாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சங்கத்தலைவர் ரவி கொடி ஏற்றி வைத்தார்.


Next Story