ஓமலூர் அருகே டெம்போ டிரைவர் கொலை: 'குடிபோதையில் முத்தமிட்டதால் கல்லால் தாக்கி கொன்றேன்'-கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்


ஓமலூர் அருகே டெம்போ டிரைவர் கொலை: குடிபோதையில் முத்தமிட்டதால்  கல்லால் தாக்கி கொன்றேன்-கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
x

குடிபோதையில் முத்தமிட்டதால் கல்லால் தாக்கி கொன்றேன் என்று டெம்போ டிரைவர் கொலை வழக்கில் கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம்

ஓமலூர்:

குடிபோதையில் முத்தமிட்டதால் கல்லால் தாக்கி கொன்றேன் என்று டெம்போ டிரைவர் கொலை வழக்கில் கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

டெம்போ டிரைவர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஊமகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கிற செந்தில்குமார் (வயது 43). டெம்போ டிரைவர். இவருடைய மனைவி சங்கீதா (35). இவர்களுக்கு தேவராஜ் (14) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். செம்மாண்டப்பட்டி ஊராட்சி காளியம்மன் கோவில் பகுதியில் சேட்டுக்கு வீடு உள்ளது. இங்கு அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி காலை அவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உள்ளே சென்று பார்த்த போது தலையில் பலத்த காயத்துடன் கல்லால் தாக்கப்பட்டு சேட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சேட்டின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

வாக்குமூலம்

தொடர்ந்து ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேட்டுவை கல்லால் தாக்கி கொன்றவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், சேட்டுவின் நண்பரான அதே பகுதிைய சேர்ந்த தொழிலாளி கிருபாகரன் (37) என்பவர், அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கிருபாகரனை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

முத்தமிட்டார்

இறந்து போன சேட்டு என்கிற ெசந்தில்குமாரும், கிருபாகரனும் நண்பர்கள் ஆவர். சேட்டு தனியாக வசித்து வந்ததால், அவரது வீட்டில் அடிக்கடி அவரும், கிருபாகரனும் சேர்ந்து மது குடித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று 2 பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர்.

நள்ளிரவில் குடிபோதையில் திடீரென்று சேட்டு, கிருபாகரனை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக தெரிகிறது. இந்த செயல் கிருபாகரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் அருகில் கிடந்த கல்லை எடுத்து சேட்டுவை தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு கிருபாகரன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story