மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா மற்றும் போலீசார் கடற்கரை சோதனை சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதையொட்டி அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்த முயன்றனர். அப்போது லாரியை நிறுத்திவிட்டு லாரியில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். லாரியை சோதனையிட்ட போது 2 லாரிகளில் மொத்தம் 6 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிகளை போலீசார் பறிமுதல் ெசய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர்களை தேடிவருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire