1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் ஆவுடையார்கோவில், தொண்டைமான்நேந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வேனை போலீசார் சோதனை நடத்தினர். அதில் சுமார் 1,200 கிலோ ரேஷன் அரிசி சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரேஷன் அரிசியுடன் சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார் சரக்கு வேன் உரிமையாளர், டிரைவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story