1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில் அருகே பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட கீழத்திருத்தங்கல் பகுதியில் வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டி மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள காளியம்மன் கோவில் அருகில் 20 மூடைகள் கிடந்தது. இதுகுறித்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதை ஆய்வு செய்த போது அந்த மூடைகளில் ரேஷன் அரிசிகள் இருந்தது. இதனை கைப்பற்றிய அதிகாரிகள் இதை யார்? இங்கு கொண்டு வந்து பதுக்கி வைத்தது என்று விசாரித்தனர். ஆனால் இந்த அரிசி மூடைகளுக்கு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. சிவகாசி பகுதியில் இருந்து அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் 1 டன் ரேஷன் அரிசி சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story