சேலம் அருகே வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 வாலிபர்கள் கைது


சேலம் அருகே  வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்  2 வாலிபர்கள் கைது
x

சேலம் அருகே வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம் அருகே உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் முன் பகுதியில் உள்ள ஒரு அறையில் ஏராளமான மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 25), மணிகண்டன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story