2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
அணைக்கட்டு அருகே 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்
அணைக்கட்டு பகுதியில் இருந்து மினி வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் ரமேஷ், அணைக்கட்டு தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி பழனி ஆகியோர் பள்ளிகொண்டா செல்லும் காந்திரோட்டில் மின்வாரியம் அலுவலகம் எதிரே சென்ற வேனை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது வேனில் இருந்த டிரைவர் அதிகாரிகளை பார்த்ததும் வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து அதிகாரிகள் மினி வேனில் சோதனை செய்த போது 54 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. தொடர்ந்து அதிகாரிகள் 2½ டன் ரேஷன் அரிசியை மினி வேனுடன் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story