போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 30 மாடுகள் பறிமுதல்


போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 30 மாடுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 30 மாடுகள் பறிமுதல் உரிமையாளர்களுக்கு அபராதம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் நகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இப்படி சுற்றித்திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் கட்டிவைத்து பராமரிக்குமாறு நகராட்சி நிர்வாகம் பலமுறை அறிவுறுத்தியும் அதை யாரும் பொருட்படுத்தாததால் மாடுகள், ஆங்காங்கே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் முக்கிய சாலைகளில் சுற்றித்திரிகின்றன.

இந்த நிலையில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா அறிவுறுத்தலின்பேரில் நகராட்சி ஊழியர்கள், சாலைகளில் சுற்றித்திரிந்த 30 மாடுகளை பிடித்து அதனை காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் கட்டி வைத்துள்ளனர். இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரத்தை நகராட்சி அதிகாரிகள் அபராதமாக விதித்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா கூறுகையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை 3 நாட்களுக்குள் செலுத்தி சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு உரிமையாளர் பெற்றுக்கொள்ளவில்லை எனில் நகராட்சிக்கு அருகில் உள்ள கால்நடை சந்தையில் ஏலம் விடப்பட்டு அத்தொகை நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என்றார்.


Next Story