5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது


5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
x

வடகாடு பகுதியில் 5 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

புதுக்கோட்டை

சோதனை

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சமீப காலமாக புகையிலை பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்து வருவதால் அதிக அளவில் சாலை விபத்து உள்ளிட்டவைகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வடகாடு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில், சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், மாரிமுத்து தலைமையிலான போலீசார் வடகாடு மற்றும் ஆவணம் கைகாட்டி பகுதிகளில் உள்ள பழக்கடை, மளிகை கடை உள்ளிட்ட கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

3 பேர் கைது

இதில் சுமார் 5 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, வடகாடு பரமன்நகரை சேர்ந்த வீராச்சாமி (வயது 70), வடகாடு செட்டியார் தெருவை சேர்ந்த சக்திவேல் (29), கறம்பக்காடு காசிம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (33) ஆகிய 3 பேரை கைது செய்து வடகாடு போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story