வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பள்ளிகொண்டாவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்
அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா ரங்கநாதர் நகரில் ஒருவர் ரேஷன் அரிசிகளை வாங்கி கடத்துவதற்காக அவரது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு நந்தகுமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அதிகாரிகள் நேற்று மாலை அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரங்கநாதர் நகரில் ஜோதி (வயது 50) என்பவரது வீட்டில் சுமார் 120 மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ஜோதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story