65 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
65 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள முத்தாண்டியாபுரம் கிராமத்தில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் அங்கு சென்று சோதனை மேற் கொண்ட போது ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட ஒரு கொட்டகையில் தலா 40 கிலோ கொண்ட 65 மூடை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ரேஷன் அரிசி மூடைகளை கைப்பற்றிய போலீசார் அப்பகுதியில் உள்ளவர்களிடம் கொட்டகை யாருடையது, ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்துள்ளது யார் என கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை. எனினும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொட்டகை உரிமையாளர் யார், பதுக்கி வைத்திருந்தவர்கள் யார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏழாயிரம்பண்ணை பகுதியில் இதேபோன்று ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைப்பதும் கடத்துவதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.