80 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்


80 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
x

நெல்லை மாவட்டத்தில் 80 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் நேற்று பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. பேட்டை நரசிங்கநல்லூர் ரோடு ரெயில்வே கேட் அருகில் மினிலாரியில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.‌ 40 மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதுதொடர்பாக நாங்குநேரி பூலம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் உடையார் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சி.என்.கிராமத்தை சேர்ந்த சுப்பு (32) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுதவிர அம்பை ஊர்க்காடு பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது, லோடு ஆட்டோவில் 40 மூட்டைகளில் 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆசீர் சாந்தகுமார் (31) மற்றும் வினோத்கனி (32) ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story