தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
போளூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
போளூர்
போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் இன்று போளூர் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது டைவர்ஷன்ரோடு பகுதியில் சிலர் ஆங்காங்கே நின்று கொண்டு அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் போளூர் சாவடி தெருவை சேர்ந்த ஆனந்த் (வயது 22), கண்ணன் தெருவை சேர்ந்த சுரேஷ் (31) மற்றும் செஞ்சி தாலுகா பொன்னகர் கிராமம் சேர்ந்த கலைவாணன் (29) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து 3 ேபரையும் போலீசார் கைது ெசய்தனர்.
அவர்களிடம் இருந்து 356 லாட்டரி சீட்டுகள், 3 செல்போன்கள், ரூ.2500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story