தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
வேளாங்கண்ணியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி:
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் படியும், தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் அறிவுரையின் படியும் வேளாங்கண்ணி கடைத்தெரு பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் பணியாளர்கள் ஆய்வு செய்தனர். இதில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ்ஆல்வாஎடிசன் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story