மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை
ஆரணி
மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ரோந்து பணி மேற்கொள்ளும் போது தச்சூர் பழைய காலணி பகுதியைச் சேர்ந்த சேகர், ராஜேந்திரன், அண்ணாமலை ஆகியவர்களுக்கு சொந்தமான மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர். அதிகாரிகளை கண்டதும் மாட்டு வண்டிகளை நடுரோட்டிலேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து மணல்கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளையும் தாசில்தார் ஜெகதீசன் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீ்ஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தலைமறைவான மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story