வீட்டில் புதைத்த கஞ்சா பறிமுதல்


வீட்டில் புதைத்த கஞ்சா பறிமுதல்
x

வீட்டில் புதைத்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தி பலரை கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த வண்ணம் உள்ளனர். ஆத்து கடை, தெரு. அய்யம்பட்டி தெரு, மம்சாபுரம் சாலை பகுதிகளில் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் அய்யம்பட்டி தெருவில் ஒரு வீட்டில் கஞ்சா புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் சந்தேகத்தின் பேரில் இந்திரா (வயது60) என்பவரின் வீட்டில் சோதனை செய்தார். போலீசார் வருவதை கண்டதும் அந்த மூதாட்டி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவரது வீட்டில் தோண்டி பார்த்த போது கஞ்சா புதைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மூதாட்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story