சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பறிமுதல்


சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதியான பஸ் நிலையம் மற்றும் மெயின் பஜாரில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதுதொடர்பாக நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி முருகன், மாடுகளை வளர்ப்பவர்கள் அவற்றை சாலையில் திரிய விடாமல் முறையாக கட்டி பராமரிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாடுகளை பறிமுதல் செய்து கோசாலையில் அடைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனாலும் மாடுகள் தொடர்ந்து மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தன. இதனால் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மற்றும் ஊழியர்கள் பஸ் நிலையம், மெயின் பஜாரில் நின்ற 9 மாடுகளை பிடித்து வாகனங்கள் மூலம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story