லாரியில் கடத்தப்பட்ட கிரானைட் கற்கள் பறிமுதல்


லாரியில் கடத்தப்பட்ட கிரானைட் கற்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

லாரியில் கடத்தப்பட்ட கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் வழியாக லாரியில் கிரானைட் கற்கள் கடத்திச் செல்லப்படுவதாக விழுப்புரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி புவியியலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலை 4 முனை சந்திப்பு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு டாரஸ் லாரியை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். அதிகாரிகளை பார்த்ததும் லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த லாரியை அதிகாரிகள் சோதனை செய்ததில், அதனுள் 16 டன் எடையுள்ள 6 கருப்பு கிரானைட் கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இவற்றை நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கிரானைட் கற்களுடன் அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து பாலசுப்பிரமணியன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கிரானைட் கற்களை கடத்திச் செல்ல முயன்றவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதோடு தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story