வீட்டில் பதுக்கி வைத்திருந்த 325 கிலோ குட்கா பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 325 கிலோ குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கந்திகுப்பம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 325 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

கந்திகுப்பம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 325 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புகையிலை பொருட்கள்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மங்கள்ராம் (வயது 28). இவர், தற்போது கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் தங்கி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ேபாலீசார் அவரை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது மங்கள்ராம் கந்திக்குப்பம் அடுத்த ராசிப்பள்ளியில் வெங்கடேசன் (35) என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து குட்கா பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கந்திகுப்பம் போலீசார் நேற்று ராசிப்பள்ளியில் உள்ள வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். அங்கு 325 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.

2 பேர் கைது

இதையடுத்து போலீசார் மங்கள்ராம், வெங்கடேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மங்கள்ராம் வடமாநிலங்களில் இருந்து குட்கா கடத்தி வந்து வெங்கடேசன் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த 325 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story