சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரியில் கடைகளில் பயன்படுத்திய 10 சமையல் கியாஸ் சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியில் கடைகளில் பயன்படுத்திய 10 சமையல் கியாஸ் சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடைகளில் சோதனை
கிருஷ்ணகிரி நகர் பகுதிகளில் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை, பேக்கரி கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள், உணவு விடுதிகளில் பெருமளவு பயன்படுத்துவதாக பறக்கும் படை தாசில்தார் இளங்கோவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள ஓட்டல், பேக்கரி, டீக்கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஓட்டல், டீக்கடைகளில் விதிகளை மீறி வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் 10 சமையல் சிலிண்டர்களை பயன்படுத்தியதை கண்டறிந்தனர். இதையடுத்து அந்த கியாஸ் சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தார். சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்திய கடைகள் மீது, வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கடும் நடவடிக்கை
இது குறித்து தாசில்தார் இளங்கோ கூறுகையில், வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்களை கடைகளுக்கு வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.