சாராய பாட்டில்-பாக்கெட்டுகள் பறிமுதல்


சாராய பாட்டில்-பாக்கெட்டுகள் பறிமுதல்
x

சாராய பாட்டில்-பாக்கெட்டுகள் பறிமுதல்

மயிலாடுதுறை

சீர்காழி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சாராய பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண் கைது

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே மீஞ்சான் குளம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி சுந்தரி (வயது60). இவர் தனது வீட்டில் விற்பனைக்காக புதுச்சேரி சாராய பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வாசுதேவன், உதவி மேலாளர் (சில்லறை வினியோகம்) சங்கர், சீர்காழி மதுவிலக்கு போலீசார் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சுந்தரி வீட்டில் 13 சாராய பாட்டில்கள், 150 சாராய பாக்கெட்டுகள் ஆகியவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுந்தரியை கைது செய்து, 13 சாராய பாட்டில்கள், 150 சாராய பாக்கெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

500 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

இதேபோல் ஆக்கூர் அருகே சின்னங்குடி கிராமத்தை சேர்ந்த நொண்டி கந்தன் ( 55) என்பவர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, நொண்டி கந்தனை கைது செய்தனர். இதுகுறித்து சீர்காழி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.


Next Story