ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

தக்கலை அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெகபர் மற்றும் போலீசார் சம்பவத்தன்று மாலையில் திருவிதாங்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் டிரைவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து காரில் சோதனை செய்தபோது 1 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து காரையும், அரிசியையும் பறிமுதல் செய்து உணவு கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story