வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்


வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
x

மூலைக்கரைப்பட்டியில் வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அரசனார்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் கண்ணன் (வயது 35). மூலைக்கரைப்பட்டியில் கரும்புச்சாறு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் மது விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் நேற்று அந்த வீட்டில் சோதனை செய்தார். அப்போது வீட்டில் இருந்து 60 வெளிமாநில மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. கண்ணன் புதுச்சேரியில்் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.


Next Story