ரேஷன் அரிசி பறிமுதல்


ரேஷன் அரிசி பறிமுதல்
x

கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சோதனைச்சாவடி அமைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில், களியக்காவிளை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் குழித்துறை பழைய பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை நோக்கி வேகமாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். காரில் சிறு, சிறு மூடைகளில் 1½ டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டிரைவர் கைது

இதையடுத்து கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், இளஞ்சிறை பண்டாரவிளையை சேர்ந்த டேவிட் மகன் சலீம் (வயது 40) என்பதும், ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்பதற்காக கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கார் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story