ரேஷன் அரிசி பறிமுதல்


ரேஷன் அரிசி பறிமுதல்
x

ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சேர்ந்தபூமங்கலம் கைலாசபுரம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த ஒரு காரை சோதனை செய்தனர். அதில் 40 கிலோ எடை கொண்ட மூடைகள் 25 இருந்தது. அதில் பார்த்தபோது ரேஷன் அரிசி என தெரியவந்தது. ரேஷன் அரிசியை சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா பறிமுதல் செய்தார். அந்த காரை ஓட்டி வந்த நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே திருக்குறுங்குடி வடக்கு தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் பிரபாகரன் (வயது 28) என்பவரை கைது செய்தனர். இது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.


Next Story