ரேஷன் அரிசி பறிமுதல்


ரேஷன் அரிசி பறிமுதல்
x

மினி லாரியில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் இடையர்தவணை விலக்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் மறித்தனர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் மினி லாரியை நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.

இதனையடுத்து போலீசார் மினி லாரியை சோதனை செய்த போது அதில் 2 ஆயிரத்து 650 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மினி லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற டிரைவர் சுரண்டையை சேர்ந்த மாடசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Next Story