1½டன் ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல்
1½டன் ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் அங்கு ரோந்து ெசன்றனர். அப்போது மூங்கில் ஊரணி பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் வீட்டு அருகே உள்ள ஓட்டு கொட்டகையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கு 1610 கிலோ ரேஷன் அரிசி 40 மூடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, வினோத் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story